புதன், 5 ஜனவரி, 2022

சென்னையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 200 மருத்துவகுழுக்கள் அமைப்பு

 சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அறிகுறி இல்லாதவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 



அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவோருக்கு சிகிக்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு ஒரு குழு வீதம் 200 குழுக்களை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. இக்குழு பாதிக்கப்படுவோரின் வீடுகளுக்குச் சென்று ஆக்சிஜன் அளவு, நோய் தொற்றின் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து பரிசோதனை செய்யும்.


மேலும் வீடு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு உதவவும், 5 பேர் கொண்டு தன்னார்வலர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


அதன்படி கொரோனா பரிசோதனை செய்ய முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.400- ம், காப்பீடு திட்டம் அற்றவர்களுக்கு ரூ. 700- ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக