ஞாயிறு, 5 டிசம்பர், 2021

தூத்துக்குடியில் பாலூட்டும் தாய்மார்கள் அறை கபளீகரம்!!! பெண்ணீய பேராளியும் தூத்துக்குடி எம்பி யுமான கனிமொழி ஆக்ரமிப்பாளர்களை அகற்றி நடவடிக்கை எடுப்பாரா??? பாலூட்டும் தாய்மார்கள் அதிர்ச்சி!!!

 தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தில்  பாலூட்டும் தாய்மார்கள் அறை அங்குள்ள சிலரால் கபளீகரம் செய்யப் பட்டுள்ளது.பெண்ணீய பேராளியும் தூத்துக்குடி எம்பி யுமான கனிமொழி ஆக்ரமிப்பாளர்களை அகற்றி நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்று திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் நெடுவழி  பெண் பயணிகள் தாய்மார்கள் தெரிவித்து வருகிறார்கள்.



இது பற்றிய தூத்துக்குடி லீக்ஸ் செய்தி யாவது:-


கடந்த அதிமுக ஆட்சியில். புறநகர் பேருந்து நிலையம் உள்பட மாநிலம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.




பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த ஒரு மணி நேரத்திலிருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். எனவே தான்  உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் என்பது ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

 அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில்  மகளிர் தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டே

அதாவது, தாய்ப்பால் ஊட்டுவதில் பணிபுரியும் மகளிருக்கு உள்ள இடர்பாடுகளை களையும் வகையிலான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தாய்ப்பால் ஊட்டும் அன்னையருக்கு அதற்கான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதும்..


 பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. தங்கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும்.


எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள் மாநகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கபட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு பாலூட்டும் தாய்மார்கள் அறை திறக்கப்பட்டது 

குடிநீர் வசதி, இருக்கை வசதி, கைகழுவும் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை

பஸ் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு பெண்கள் பயன் பெற்று வந்தார்கள். மேலும் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பஸ்களில் தனி இருக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இருந்து வந்தது.

ஆண்கள் அனுமதி இல்லை என அறை வாசலில் வாசகம் உள்ளது


இந்நிலையில்.. புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை கடந்த சில நாட்களாக  தற்போது அரசு பஸ் ஓட்டுனர் நடத்துனர் அந்த அறையை ஆக்கிரமிப்பு செய்து தங்களது ஒய்வு இடமாக இருந்து வருகிறார்கள். பச்சிளம் குழந்தையோடு வரும் ஏழை தாய்மார்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். 

அவர்கள் விசாரித்ததில் இது தங்களுக்கான இடம் மேலிடத்தில் தெரிவித்து விட்டோம் என்கிறார்கள்.


இதுபற்றி தூத்துக்குடி எம்எல்ஏ மற்றும் மகளிர் நலன் மற்றம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோருக்கு இவ் விஷயம் தெரிந்து தான் நடந்துள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள்..

மேலும் ஆக்கிரமிப்பு பற்றி மாதர் சங்கமும் அதிமுக தரப்பிலும் பரபரப்பு தொற்றியுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக