தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைகாட்சி கூட்டமைப்பு சார்பில் 2021 ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை முன்பாக நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஸ் ஆகியோர் கலந்துகொண்டு
நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு புத்தாடைகளையும், அத்துடன் கிறிஸ்துமஸ் இனிப்பு கேக்குகளும் வழங்கினார்கள்...
சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி டவுண் (பொறுப்பு) துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத், விளத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், மற்றும் ஜேம்ஜே அந்தோணிசாமி, மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் கலந்துகொண்டார்கள்.
அதன் பின்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேசியதாவது:-
ஏழைகளுக்கு உதவுவது கடவுளுக்கு செய்யும் ஒரு சேவை என்றும் அதைதொடர்ந்து செய்து வரும் ... தூத்துக்குடி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் மேலும் இது போன்ற சேவைகள் தொடர்ந்து செய்திட வேண்டும் என பாராட்டினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டபத்திரிகை மற்றும் தொலைகாட்சி கூட்டமைப்பு தலைவர் அ.பிரான்சிஸ் தலைமையில் மாவட்ட செயலாளர் மார்க்மகேஷ் பொருளாளர் எஸ்.டி.கணேசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மற்றும் துணைச் செயலாளர் சி.என்.அண்ணாதுரை, நிர்வாகிகள் இம்மானுவேல் குணசிங், சாம்ராஜ், மெர்வின், பரத், சுதர்ஸனா, நீம் லூயிஸ், சொக்கலிங்கம், ரத்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக