தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி ’உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் தங்கள் மீதுள்ள சிறுதண்டனைகளை ரத்து செய்யுமாறு மனு கொடுத்தனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் 10 காவல் ஆய்வாளர்கள் 9 உதவி ஆய்வாளர்கள் உட்பட 112 பேருக்கு சிறுதண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதில் இன்று (24.12.2021) முதற்கட்டமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் அவர்கள் 49 காவல்துறையினருக்கு சிறுதண்டனைகளை ரத்து செய்ததற்கான ஆணைகளை வழங்கினார்.
இதில் ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் மொத்தம் 112 பேர் தங்கள் மீதுள்ள சிறுதண்டனைகளை ரத்து செய்யுமாறு ‘உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களின் சிறுதண்டனைகளை ரத்து செய்து அதற்கான ஆணையினை சம்மந்தப்பட்ட காவல்துறையினரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, மாவட்ட காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் மாரிமுத்து உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி லீக்ஸ் :24.12.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக