உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இன்று (26/10/2021) நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, மார்பக புற்றுநோயிக்கான சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை நலம் விசாரித்தார்.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி
அடுத்ததாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு பின் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவர்கவர்களுடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் மூலம் 260 - க்கும் மேற்பட்ட வர்கள் கதிரியக்க சிகிழ்ச்சை முறையால் இங்கு புற்று நோய் குணமடைந்து சென்றடைந்ததை அறிந்து தூத்துக்குடி எம்.பி.கனிமொழி மருத்துவர்களை பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துறை மருத்துவர் லலிதா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக