தூத்துக்குடி லீக்ஸ் : 01.09.2021
தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் பழனிச்சாமி நேற்று (31.08.2021) பணி ஓய்வு பெற்றார்.
இவர் 01.04.1981 வருடம் இரண்டாம் நிலை காவலராக காவல்துறையில் பணியில் சேர்ந்து 40 வருடங்கள் சிறப்பான முறையில் பணி செய்து காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து பழனிச்சாமி அவர் பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக இன்று (01.09.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் காவல் துறையில் சிறப்பான முறையில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பழனிச்சாமியை வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கினார்.
பணி ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவருக்கு தனது நன்றி தெரிவித்தார்.
பின்பு தன்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக