தூத்துக்குடி மாவட்டம்: 10.09.2021
விளாத்திகுளம் உட்கோட்ட பகுதியில் மணல் திருட்டு மற்றும் தங்க நகை திருட்டு வழக்கு எதிரிகள் 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது பற்றிய செய்தியாவது:-
கடந்த 28.08.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வேம்பார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வேம்பார் பகுதியில் டிராக்டரில் ஆற்று மணல் திருடிய வழக்கில் டிராக்டர் ஓட்டுநரான கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் ஹரிகிருஷ்ணன் (57) மற்றும் டிராக்டர் உரிமையாளரான வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் முத்தழகு (57) மற்றும் முத்தழகுவின் கார் ஓட்டுநரான திரவியபுரத்தை சேர்ந்த சுடலைமாடன் மகன் முனீஸ்வரன் (38) ஆகியோரை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
![]() |
| முத்தழகு |
![]() |
| கண்ணன் |
நகை திருட்டு
மேலும் கடந்த 10.08.2021 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீரான் பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமி கழுத்தில் 5 பவுன் தாலி செயின் திருடிய கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி தெருவை சேர்ந்த கணேசபாண்டியன் மகன் கண்ணன் (43), கோவில்பட்டி டால்;துரை பங்களா தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் மனைவி செண்பகவள்ளி (எ) ராணி (55) மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஈச்சந்தா பகுதியை சேர்ந்த அருட்செல்வம் மனைவி சண்முகசுந்தரி (32) ஆகிய மூவரையும் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்குகளின் முக்கிய எதிரிகளான முத்தழகு மற்றும் கண்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கலா அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் . கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் 1) முத்தழகு மற்றும் கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி தெருவை சேர்ந்த கணேசபாண்டியன் மகன் 2) கண்ணன் ஆகிய இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கலா, மேற்படி எதிரிகள் முத்தழகு மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக