சனி, 4 செப்டம்பர், 2021

டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 - 2022க்காக போட்டியில் தங்கம் வெள்ளி வென்ற தூத்துக்குடி மாவட்ட மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டு !!!!

தூத்துக்குடி லீக்ஸ்  :04.09.2021

time 2.25pm

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன்  ஷிப் 2021 - 2022க்காக போட்டி.

இதில் கலந்து கொண்டு  தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கினார்



கடந்த 28.8.2021 மற்றும் 29.08.2021 ஆகிய இரு நாட்கள்  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.


 தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன்  ஷிப் 2021 - 2022க்காக போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.



இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 22 பேரும், மாணவிகள் 19 பேரும் மேற்படி டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்றுள்ளனர். 

பயிற்சியாளர் கிறிஸ்டோபர் உடன் அவர்கள் 41 பேரையும் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக