thoothukudileaks - 06 - 09 - 2021
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 3 நபர்களுக்கு 14 இலட்சம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் 260 சிறுபான்மையினர் மகளிருக்கு 26 இலட்சம் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார் கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டார்.
பின்னர் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது
தமிழ்நாட்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 5 ம் நாளன்று ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் உத்தரவின்படி
தூத்துக்குடி மாவட்டத்தில் 11 நல்லாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
அவர்களுக்கு இன்று நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. என்றார்.
பின்பு நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களுக்கு கனி மொழி M.P. சால்வை அணிவித்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உதவி ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக