தூத்துக்குடியில் கால்டுவெல் மேல்நிலைபள்ளி முன்பு கிறிஸ்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்துவருகிறார்கள் இதனால் தூத்துக்குடி காவல்துறை அதிரடி போலீசார் வாகனத்தில் வந்து இறங்கியுள்ளார்கள் இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தூத்துக்குடி நாசரேத்தில் நடைபெற்ற டயோசிஷன் இரண்டாவது கட்ட தேர்தலில் தவறு நடப்பதாக கூறி யோவான் பேராலய சபை மக்கள் போராட்டம் நடத்தியதின் விளைவாக ஏரல் தாசில்தார் இசக்கி ராஜா தேர்தலை நிறுத்தி வைத்தார்.
அந்த தேர்தலை 30 - 08 - 2021 இன்று காலை 10 மணிக்கு கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைத்து நடத்தப்போவதாக திருமண்டல நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இன்று அறிவிப்பு கொடுத்து கால அவகாசம் அளிக்காமல் சம்பந்தமில்லாத இடத்தில் தேர்தலை நடத்தக்கூடாது.
சுயநிதி கல்வி நிலையங்களில் பிரதிநிதிகள் தேர்தல் நடத்திய பிறகு தான் சேகர மன்றத்திற்கு தேர்தலை நடத்த வேண்டும்.
இல்லையேல் சுயநிதி உள்ளிட்ட திருமண்டல ஊழியர் தேர்தலை நடத்த கூடாது. அதற்கு நிர்வாகிகள் உறுதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி காவல்துறை அதிரடி் போலீசார் குவிக்கபபட்டுள்ளார்கள்.
இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக