வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 20, 21, 22,ஆகிய தேதிகளிலும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை தமிழக அரசு உத்தரவு!!!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  இரு வாரங்களுக்கு கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் 

பக்தர் கள் தரிசனத்துக்கு தடை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 






வெள்ளி - சனி - ஞாயிறு ஆகிய  3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

அதன்படி தமிழகம் முழுவதும்  8 ம் தேதி முதல் வெ ள்ளி - சனி - ஞாயிறு  3 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்ல .


இது தொடர்பாக அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 


 கொரோனா பரவ வாய்ப்புள்ளது. என்பதால்....?. 

தேவ ஆலயங்களில் ஆராதனைகளுக்கும் .... மசூதிகளில் தொழுகைக்கும் கோவில்களில் சாமி தரிசனத்தும்   தடை விதிக்கப்பட்டுள்ளது. 


சர்ச்சுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் ஜெபம் செய்ய அனுமதியில்லை. 


எனவே அந்தந்த சர்ச் நிர்வாகங்கள் சார்பில் இணையதளம் வழியாக பிரார்த்தனைகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். 


அடுத்த வாரம் 2021 ஆகஸ்ட் 20,21,22 ஆகிய தேதிகளிலும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக