தூத்துக்குடி மாவட்டம் 04.08.2021
சமீபகாலமாக தூத்துக்குடியில் சில பகுதியில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாகவும் நடவடிக்கை எடுங்கள் என ரகசிய தகவல் ...
காவல்துறை அலர்ட் ஆவதற்குள் சில பகுதியில் உள்ள ரேசன் அரிசி கடத்தல்காரர்கள் பலர் பிடிபடாமல் தப்பித்தவாறு இருந்தார்கள். காவல்துறை துரித நடவடிக்கையால் தற்சமயம் தொடர்ச்சியாக சிக்கி வருகிறார்கள்.
தற்போது ....
(இன்று 04-08--2021 )
தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ், தலைமைக் காவலர்கள் அழகுநம்பி, சங்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (04.08.2021) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்டன் புரம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது போல்டன்புரம் 1வது தெருவை சேர்ந்த மைதீன் அப்துல் காதர் மகன் நாகூர் மைதீன் (42) என்பதும், அவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக 40 கிலோ எடையுள்ள 20 மூட்டைகள் என மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக மேற்படி தனிப்படை போலீசார் நாகூர் மைதீன் என்பவரை கைது செய்து, மேற்படி ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தினமும் புரோக்கர்கள் ரேசன் கடை அருகே நின்று கொண்டு ரேசன் கடை அரிசி களை முடை மூடையாக சேகரித்து கொண்டு சிலர் கொண்டு செல்கிறார்கள் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் இதற்கு துணைபோனால் சம்பந்தபபட்ட ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக