தூத்துக்குடியில் உப்பளத் தொழிலதிபர் A. R. S. தனபாலன் (வயது 75) மற்றும் அவரது மருமகன் உடன் சென்ற காரை வழிமறித்து 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அய்யனார்புரத்தில் உப்பள தொழி பதிபர் தனபாலன் சொந்தமான 5 கடைகள் உள்ளன. அவற்றில் ஒரு கடையில் ஜெயராமன் வாடகைக்கு தொழில் செய்து வந்தார்.
இவருக்கும் தொழிலதிபருக்கும் கடந்த ஒரு வருடமாக கடை வாடகை தருவதில் பிரச்சினை ஏற்பட்டது.
இது விஷயமாக ஜெயராமன் கடந்த ஒரு வருடமாக (2020அக்டோபர்) வாடகை தராமல் வாடகையை கொடுக்க மறுத்து வந்துள்ளார்.
இது குறித்து தனபாலன் தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தார்.
தூத்துக்குடி காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த 07.08.21 அன்று காலை 7.00 மணி அளவில் தனபாலன் அவருக்கு சொந்தமான உப்பளத்திற்கு தனது மருமகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது 5 நபர் கொண்ட ரவுடி கும்பல் காரை மறித்து அடித்து நொறுக்கி தனபாலன் மற்றும் அவரது மருமகன் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Video பார்க்க
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனபாலன் அவரது மருமகன் சிகிழ்ச்சை பெற்று வருகிறார்கள்
இதனால் தூத்துக்குடி தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி யில் தனிநபர் பிரச்சினையை சிலர் சமூக பிரச்சினையாக வேறு திசையில் மாற்ற முயற்சித்து Whatsapp -போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை தடுத்து தூத்துக்குடி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பு எதிர்பார்க்கிறார்கள்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக