தூத்துக்குடி மாவட்டம்: 07.08.2021
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை கொலை நடந்த சில மணி நேரத்தில் உடனடியாக எதிரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இது பற்றிய பத்திரிக்கை செய்தியாவது:-
தூத்துக்குடி மேலசண்முகபுரம் வண்ணார் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் (38) 45வது வார்டு திமுக வட்ட செயலாளர்
![]() |
| நடராஜன் திமுக வட்ட செயலாளர் |
இவர் நேற்று (06.08.2021) இரவு தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஷிப்பிங் கம்பெனி முன்பு மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், முதல் நிலை காவலர்கள் பென்சிங், சாமுவேல், மாணிக்காராஜ், செந்தில்குமார், திருமணி மற்றும் காவலர் முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினரின் தேடுதல் வேட்டையில், தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த தங்கதுரை மகன் தங்ககார்த்திக் (25), தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த சௌந்திரபாண்டியன் மகன் அருண்குமார் (22), தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அந்தோணி முத்து (21) மற்றும் தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து (21) ஆகிய 4 பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக நடராஜனை கத்தியால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் மேற்படி 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரைள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக