வியாழன், 19 ஆகஸ்ட், 2021

ஆகஸ்ட் 20 நாளை அடுத்த இரண்டாம் கட்ட தூத்துக்குடி-நாசரேத் டயோசிஸின் தேர்தல்??? தூத்துக்குடி - நாசரேத் டயோசீசன் தேர்தலில் பயங்கரம்!!!!வெற்றி பெற்ற அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டி படுகொலைவெறி செயல்!!! நால்வர் கைது!!!!

4. பேர் கைது

தென்மாவட்டத்தில் ரவுடிகள் ஒடுக்க சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறதா? என டிஜிபி செந்தாமரை கண்ணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நேரத்தில் இச்கொலை அரங்கேறியுள்ளதால் கூடுதல் அதிர்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.



தூத்துக்குடி நாசரேத் டயோசீசன் தேர்தல் கடந்த 2021 ஆகஸ்ட் 16 -ல் நடைபெற்றது. தேர்தல் தொடர்பாக பல்வேறு இடங்களில்  பிரச்சினை தூத்துக்குடி மாவட்டத்தில்  கிறிஸ்துவர்கள் மத்தியில் ஏற்பட்டடது .


இதில் ஏரல் அகரம்  சபையில் பஞ்சாயத்து தலைவர் பொன் சீலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.




இந்நிலையில் 18 - தேதி அகரம் பகுதியில பொன் சீலன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி-நாசரேத் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 இது தொடர்பாக பொன் சிலனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜெபஸ்டியான்  உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், அகரம் ஊராட்சியில் தலைவராக இருந்து வந்தவர் ஈசாக்கு மகன் பொன்சீலன்(37). அதிமுக பிரமுகரான இவர், தற்போது நடந்து வரும் சி.எஸ்.ஐ தூத்துக்குடி – நாசரேத் திருமண்ட தேர்தலில் போட்டியிட்டு பெருமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இன்று அகரம் ஊரில் கோவில் கொடைவிழா நடந்தது. கோவில் கொடைவிழாவிற்கு சென்ற பஞ்சாயத்து தலைவர் பொன்சீலன், பஞ்சாயத்து துணைத் தலைவர் தவசிக்கனி வீட்டிற்கு சென்றார். 


அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் பொன்சீலனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.



 இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பொன்சீலன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த கொலை தொடர்பாக அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயம் என்ற ஜெயசீலன் மகன்கள் ஜெபசிங் சாமுவேல் (30), ஜெபஸ்டின் (25), அகரம் தெற்கு தெருவைச் சேர்ந்த வெள்ளப்பழம் மகன் மாரிமுத்து (26), ராஜா மகன் பெனித் (23) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த பொன் ராஜ் மகன் ஜெகன் 35, சுவாமி அடியான் மகன் ரூபன் 26, ஜெய்குணம் மகன் அருள்ராஜ் ஆகிய 3பேரை தேடி வருகின்றனர்.



2017 ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த லெனின் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் பொன்சீலன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் பொன்சீலன் ஆதரவாளர்களுக்கும், லெனின் ஆதரவாளர்களுக்கும் இடையே பகை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. லெனின் கொலை சம்பவத்திற்கு பிறகு லெனினின் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்சீலன் வெற்றி பெற்று அகரம் பஞ்சாயத்து தலைவரானார்.

 

தற்போது தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் போட்டியிட்ட பொன்சீலன் அதிலும் வெற்றி பெற்று பெருமன்ற உறுப்பினரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெபஸ்டின் தோல்வியடைந்தார்.



 தற்போது பொன்சீலன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமண்டல தேர்தலில் தோல்வியடைந்த ஜெபஸ்டின் பெயரும் இருக்கிறது. இவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட லெனினின் உறவினர் ஆவார்.


தற்போது பொன்சீலன், தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகரில் வசித்து வந்தார். 


 இந்தநிலையில்தான் லெனின் உறவினரான ஜெபஸ்டினை திருமண்டல தேர்தலில் தோற்கடித்தார்.  லெனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் பொன்சீலன் கொலை செய்யப்பட்டிருக்கிறாராம்.


 இது குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இச்சம்பவம் நடந்த ஆகஸ்ட் 18 - ம் தேதியில்தான் தென்மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை சட்டம் ஒழுங்கு பாராமரிக்கபடுகிறதா? என தூத்துக்குடியில் கூடுதல் டி.ஜி.பி. செந்தாமரைகண்ணன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போதுதான் தூத்துக்குடி- நாசரேத் டயோசிஸின் தேர்தல் எதிரொலியால் வெற்றிபெற்ற அதிமுக பஞ்சாயத்து. தலைவர் வெட்டி கொலை செய்தி தகவல் வந்ததும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

தூத்துக்குடி மாவட்ட  S.P. பிரஸ்மீட்

தீவிர தேடுதல் வேட்டையில் கொலை செய்து விட்டு தப்பிய மேற்படி எதிரிகள் 7 பேரில் 1) ஜெபசிங் சாமுவேல், 2) பெனித் நியூட்டன், 3) மாரிமுத்து மற்றும் 4) ஜெபஸ்டின் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 2 அரிவாள்கள், கொலை செய்து விட்டு திருடிய நகைகளில் 21 பவுன் தங்க நகைகள் மற்றும் டாடா சுமோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 


இதில் அகரம் பகுதியைச் சேர்ந்தவர்களான குணசேகர் மகன் 1) பாலகிருஷ்ணன் (27), கொடிவேல் முருகன் மகன் 2) நவநீதன் (27) மற்றும் சுவாமியடியான் மகன் 3) ரூபன் தேவபிச்சை (27) ஆகிய 3 பேர் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

மேலும் தலைமறைவாக உள்ள மற்ற எதிரிகளையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக