தூத்துக்குடி மாவட்டம் : 25.07.2021
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று (24.07.2021) ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப் போது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி எட்டயபுரம் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெயக்குமார் (27) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்....?.
அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தராததால் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஹென்சன் பால்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
ஜெயக்குமார் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 12 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தூத்துக்குடி மத்தியபாகம், ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், எப்போதுவென்றான் காவல்நிலையத்தில் 2 வழக்குகள் என மொத்தம் 17 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக