வியாழன், 15 ஜூலை, 2021

மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கு விசாரணை!!!

மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரது தந்தை டாக்டர் சாமி அவர்கள்  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் , தூத்துக்குடி நகர காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆய்வாளர்கள் திருமலை , பாஸ்கர் , அன்னத்தாய் , உதவி ஆய்வாளர்கள் லதா, நம்பிராஜன் ஆகியோர் மீது மாநில மனித உரிமை ஆனையத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரனை இன்று  15-07-2021 திருநெல்வேலியில் நடைபெற்றது.



எதிர்மனுதாரர்கள் ஆய்வாளர் பாஸ்கர்  உதவி ஆய்வாளர்  நம்பிராஜன் ஆகியோர் ஆஜரானார்கள். 


வழக்கு விசாரனையை ரத்து செய்ய காவல் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவினை கனம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது .


அதற்கான உத்தரவினை மனுதாரர் தரப்பில் இன்று ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது அதனை ஏற்றுக்கொன்ட ஆணையம் வழக்கினை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும்

மாணவி சோபியாவையும் , அவரது தந்தை சாமியையும்  அடுத்த விசாரனையின் போது கண்டிப்பாக குறுக்கு விசாரனை செய்ய வேண்டும் என கூறி வழக்கு  விசாரனை 08-09-2021 தேதி  நடைபெறும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.


மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள்  சுப.இராமச்சந்திரன் பெ.சந்தனசேகர் ஆஜரானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக