புதன், 14 ஜூலை, 2021

அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாள் ...தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நேரில் சென்று வாழ்த்து!!!!

 அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாள் இன்று (14-07-2021 )அதை யொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கட்சி நிர்வாகிகள் வில்சன் மற்றும் மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோர் தலைவர் சரத்குமார் - ஜ அவரது இல்லத்தில் சந்தித்து காலையில் பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்து மலர்பொக்கை வழங்கினார்கள். அதற்கு தலைவர் சரத்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.



சரத்குமார் 14-07-1954

தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார்.

இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் .

முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர்.

தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர்,

சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார்.

இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.

இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக