தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் தலைவர் டாக்டர் எடப்பாடியார் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வருகிற 28-ஆம் தேதி புதன்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அறப்போராட்டம் அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக தரப்பில் அறிக்கை விட்டுள்ளார்கள்.
அதில் கூறியிருந்தாவது :-
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (26.07.2021) திங்கள்கிழமை மாலை 3.00 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாச்சி எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தூத்துக்குடி மாநகர வட்டக் கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக