செவ்வாய், 26 ஜனவரி, 2021

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு!!!.அதிமுகவினர் சென்னையில் குவிந்தனர்!!!

 



தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று 27.01 - 2021திறந்து வைக்கிறார்

இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.

தமிழகம் முழுவதிலிருந்து சென்னையில் அதிமுக கட்சியினர் குவிந்தார்கள்

50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.


இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது.


43 மீட்டர் அகலமும் கொண்டது.




மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது.

காமராஜர் சாலையில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    அதிமுகவினர் 

சென்னையில் குவிந்தனர்

புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்படுவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வந்து குவிந்துளளார்கள்

. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்ளது. அடையாறு பகுதியில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்கள் கச்சேரி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


             தூத்துக்குடி லீக்ஸ்

                  27 - 01 - 2021



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக