திங்கள், 18 ஜனவரி, 2021

கர்நாடகா அத்திப்பள்ளியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்ய அம்மாநில அரசு லஞ்சம் ஓழிப்புதுறையினருக்கு உத்தரவு விட வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !!! '

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.



தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் டூரிஸ்ட் வாகனங்கள் கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் அம்மாநில அரசு நிர்ணித்த சாலை வரி 999 மட்டும் சாலை வரி கட்டியதாக பில் கொடுக்கபடுகிறது. ஆனால் அலுவகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் உதவியாளர்கள் தமிழக டூரிஸ்ட் வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்குவது 3000 அல்லது 3500 லஞ்சமாக வாங்கபடுகிறது . தமிழக வாகன ஓட்டிகள்  அதிகாரிகளை எதிர்த்து கேள்வி கேட்டால் சாலை வரி போட்டு தர முடியாதுனு அவர்களை இழிவாக பேசுவது போன்ற செயல் தொடர்ந்த வண்ணமாக உள்ளது . கர்நாடகா மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகளின்  அராஜக போக்கை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .  


 மேலும் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் டூரிஸ்ட் வாகன ஓட்டிகளும் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். ஆகயினால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உடனடியாக கர்நாடகா அரசுக்கு உரிய அழுத்ததை கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . 


 கர்நாடகா அத்திப்பள்ளியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகளின் அராஜாக போக்கினால்  அம்மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்யும் B J P அரசின் நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது . ஆகயினால் கர்நாடகா அரசு உடனடியாக அத்திப்பள்ளியில் உள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தை ஆய்வு செய்ய லஞ்சம் ஓழிப்பு துறையினருக்கு உத்தரவு விட வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக