ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சென்னையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெ. நினைவு மண்டபம் திறப்பு விழா. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலிருந்து 2500 பேர் பங்கேற்பு!!!.

 


சென்னையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெ. நினைவு மண்டபம் திறப்பு விழா. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலிருந்து 2500 பேர் பங்கேற்க உள்ளதாக...

தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்கள்.


தூத்துக்குடி லீக்ஸ் ஜன 24-01-21

சென்னையில் வருகிற 27 ஆம் தேதி நடைபெறும் மறைந்த தமிழக முதல்வர் ஜெ. நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க  பொதுமக்களுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நேற்று 24.01.2021 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 

மாவட்ட கழக அவைத்தலைவரும் வேளாண் விற்பனைகுழு உறுப்பினருமான வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாவட்ட கழக துணை செயலாளர் சந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் பேசிய எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மறைந்த அம்மா அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் சென்னை மெரீனா நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உலக தரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் மிகப்பிரமாண்டமான நினைவிடம் ஒன்றை கட்டி அதனை வருகிற 27ஆம் தேதி திறந்து வைக்கிறார். 


பீனிக்ஸ் பறவை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடத்தை  பார்வையிட்டு வழிபடவும் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கவும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் அழைப்பை ஏற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்திலிருந்து 2500பேர் பங்கேற்க தயாராக இருக்கிறோம் சென்னையில் எழுச்சியோடு கூடும் இந்த கூட்டத்தின் மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலின் கழகத்தின் வெற்றி செய்தியை உணர்த்த வேண்டும்  என்று பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருச்செந்தூர் ராமச்சந்திரன், உடன்குடி தாமோதரன், ஆழ்வை மேற்கு செம்பூர் ராஜ்நாராயணன், ஆழ்வை கிழக்கு விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு காசிராஜன், சாத்தான்குளம் சௌந்தரபாண்டி, மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் பி.என். ராமகிருஷ்ணன், பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, கிழக்கு பொறுப்பாளர் மனோஜ்குமார், மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், அதிமுக பிரமுகர் அன்பு பாலன், துணைச் செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் வலசை வெயிலுமுத்து, மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர்கள் கல்விகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் சோபன், சகாயராஜா, பேரூராட்சி கழகச் செயலாளர்கள் மகேந்திரன், காசிராஜன், ஆத்திப்பழம், செந்தில்ராஜகுமார்,கிங்சிலி ஸ்டார்லிங், வேதமாணிக்கம், ரவிச்சந்திரன், செந்தமிழ் சேகர், ஆறுமுகநயினார், சோமசுந்தரம், மற்றும் மனுவேல்ராஜ், முரளி, அருண்ராஜா,முனியப்பன், சிவசாமி, சரவணவேல் பாலஜெயம், சாம்ராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக