தூத்துக்குடி லீக்ஸ்- 06-12- 2020 2.00 PM
தமிழகத்தில் பாஜகவினர் வேல் யாத்திரை ...நடத்த போவதாக அறிவித்து மாநில தலைவர் முருகன் தலைமையில் பாஜக-வினரை திரட்டி வேல் யாத்திரை பயணம் மேற்கொண்டுவருகிறார்......
இதில் காவல்துறை அனுமதி இன்றி நடைபெறுவதாக பல இடங்களில் காவல்துறை பாஜக-வினரை கைது பண்ணி விடுவித்துள்ளனர்.
இந்நிலையில்...
திருச்செந்தூரில் பாஜக - வின் வேல் யாத்திரை 07 - 12 - 2020 நிறைவு பெறுவதாகவும் ....தெரிவித்து இருந்தார்கள்.
மேலும் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் கரு நாகராஜன் சமீபத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வந்தபோது ..வேல் யாத்திரை நிறைவு நாளில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொள்வார் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று அதிரடியாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில்....
திருச்செந்தூரில் 07 - 12 - 2020 திங்கள் அன்று நடைபெறும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை அனுமதியை மீறி பொதுக் கூட்டம் நடத்தினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று...
தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை அறிவிப்பு தெரிவித்து உள்ளார்.
இதன்மூலம் பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில்..
திருச்செந்தூரில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக