தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட கோரி தமிழக அரசை வலியுறுத்தி தமிழர் விடுதலை களம் சார்பில் நேற்று (3-12-2020)மாலை விவிடி சிக்னல் அருகில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் காளிராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சரவணகுமார், மத்திய மாவட்ட தலைவர் ராஜேஸ் பாண்டியன், மத்திய மாவட் ஒருங்கிணைப்பாளர் ரா. பால விநாயகம் தெற்கு மாவட்ட செயலாளர் மங்களராஜ் மத்திய மாவட்ட செயலாளர் ரஞ்சித் பாண்டியன் பங்கேற்ற நிகழ்வில்.... தமிழர் விடுதலை களம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் எழுச்சியுரை ஆற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது... குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், வாதிரியார், பள்ளன் ஆகிய ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட கோரி தமிழக அரசை வலியுறுத்தி தமிழர் விடுதலை களம் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மண்ணின் பூர்வக்குடி மக்களாகிய வேளாண் தொழிலை முதன்மையாகக் செய்து வரும் இந்த சமூகத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து தருவோம் என்று வாக்குறுதிகளை கூறி ஆட்சி கட்டிலில் அமரும் அரசியல் கட்சிகள் எங்களை மோசடி செய்து எங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கின்றனர். வருகிற 2021 தேர்தலில் கண்டிப்பாக எங்களது எதிர்ப்பை காட்டுவோம் என்று அவர் கூறினார்.
வடக்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை, வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொட்டல்காடு முத்துகிருஷ்ணன், கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்வாகனன், கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் காசி மாரியப்பன், செயலளார் சக்திய ராஜ், போன்றோர் பங்கேற்றார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழர் விடுதலைக் கழக ஆர்ப்பாட்டத்தில் பல கிராமங்களைச் சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பலர் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக