தூத்துக்குடி மாவட்டம் :24.11.2020
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம்.
சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் கைது.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் 23.11.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மதிராஜன் (43) என்பவர் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகள் எண்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து மதிராஜனை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த மூன்று லாட்டரி சீட்டுகள் எண்களும் ரூபாய் 500 பணமும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்டதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடையில் விற்பனை செய்தவர் கைது
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்சிங் தலைமையிலான போலீசார் 23.11 .2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1வது தெரு பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் இசக்கித்துரை(44) என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் சிங் வழக்கு பதிவு செய்து இசக்கிதுரையை கைது செய்தார். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போனை திருடிய 3 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் காளிமுத்து(33). இவர் 23.11.2020 அன்று இரவு தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மெயின் ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் வாசலில் தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது தனது சட்டைப்பையில் வைத்திருந்த ரூபாய் 7000/- மதிப்புள்ள செல்போன் காணாமல் போனது. இதுகுறித்து காளிமுத்து தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் தூத்துக்குடி பொன்னகரத்தைச் சேர்ந்த செல்வம் மகன் ஹரிபாஸ்கர்(20), தூத்துக்குடி, சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த மரிய அழகன் மகன் முத்துச்செல்வம் (20) மற்றும் தூத்துக்குடி, சக்திவிநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிச்செல்வம்(18) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து காளிமுத்துவின் செல்போனை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்சிங் வழக்கு பதிவு செய்து எதிரிகள் மூன்று பேரையும் கைது செய்தார். மேலும் திருடப்பட்ட ரூபாய் 7000/- மதிப்பிலான செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
தாளமுத்துநகர் காவல் நிலையம்
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது.
தூத்துக்குடி, துப்பாஸ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மரகதவேல் மகன் சண்முகவேல்(21) மற்றும் கிருஷ்ணன் மகன் செல்லபேச்சி(25). இவர்கள் இருவரும் இன்று(24.11.2020) தூத்துக்குடி கோமேஸ்புரம் பாலம் அருகே வந்து கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து சண்முகவேல் மற்றும் செல்லபேச்சி ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
முத்தையாபுரம் காவல் நிலையம்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது.
முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீஸார் 23.11.2020 அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே முத்தையாபுரம், சவேரியார்புரத்தைச் சேர்ந்த தொம்மை அந்தோணி மகன் சந்தானதுரை (64) என்பவர் தனது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முத்தையாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து சந்தானதுரையை கைது செய்தார். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 51 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல செய்யப்பட்டது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக