தூத்துக்குடி லீக்ஸ் 22.11.2020
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் (Missing Person) பற்றிய வழக்குகளில், காணாமல் போனவர்களை விரைந்து கண்டு பிடித்து தீர்வு காணும் வகையில் 8 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி ராஜ் மஹாலில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் 61 பேர் குண்டர் சட்டத்தில் கைது- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்து வருவதால், அவற்றிற்கு விரைந்து தீர்வு காண்பதற்கு அந்தந்த பகுதி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காணாமல் போனவர்களின் உறவினர்களை அழைத்து சிறப்பு முகாம்கள் அமைத்து விசாரணை நடத்த அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி தூத்துக்குடி உட்கோட்டத்திற்கு தூத்துக்குடி ராஜ் மஹால், தூத்துக்குடி ஊரகத்திற்கு மடத்தூர் பத்திரகாளியம்மன் திருமண மண்டபம், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு திருச்செந்தூர் ராஜ் மஹால், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு மல்லிகை மஹால், சாத்தான்குளத்திற்கு TDTA புலமாடன் செட்டியார் மேல் நிலைப்பள்ளி, மணியாச்சிக்கு ஒட்டப்பிடாரத்தில் உள்ள VOC பள்ளி, விளாத்திக்குளத்திற்கு RPK மஹால், கோவில்பட்டிக்கு லெட்சுமி மஹால் ஆகிய 8 இடங்களில் இந்த முகாம் இன்று நடைபெற்று வருகிறது.
இன்று (22.11.2020) தூத்துக்குடி ராஜ் மஹாலில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஏற்கனவே கடந்த 03.10.2020 அன்று இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் 34 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு வந்துள்ள வழக்கின் மனுதாரர்கள் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புதிதாக காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்கள், அவர்களின் கைவிரல் ரேகை போன்ற ஏதேனும் புதிய விபரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் அதை கொடுப்பதன் மூலம் காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எங்கள்து நோக்கம் காணாமல் போனவர்களை உயிருடன் மனுதாரர்களிடம் மீட்டுக்கொடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம். காணாமல் போன சிலர் வேறு எங்காவது சென்று இறந்திருக்கலாம். அவர் அடையாளம் தெரியாதவர்கள் என நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கலாம். அது போன்ற புகைப்படங்களையும், சில மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள் ஆகியவர்களை கண்டுபிடித்து காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் அவர்களது புகைப்படங்களையும், அவர்கள் பற்றிய விவரங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள கணிணி மற்றும் பெரிய மின் திரையில் திரையிட்டு காண்பிக்கப்படும். உறவினர்கள் அப்புகைப்படங்களை பார்த்து அடையாளம் கண்டு பிடிக்க ஏதுவாக இருக்கும், மேலும் மனுதாரர்கள் காணாமல் போனவர்களை பற்றிய முழு விவரங்களை காவல்துறையினருக்கு அளித்து ஒத்துழைப்பு தருவதன் மூலம் காணாமல் போனவர்களை, எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கண்டு பிடிக்க எளிதாக இருக்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறினார்.
மேலும் அவர் அப்போது கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*இ தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 8 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேரும், பாலியில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 18 பேரும் அடங்குவர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 61 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரவுடித்தனம் செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, உதவி ஆய்வாளர்கள் திரு. திரு. ராஜாமணி, திரு. ஜனார்த்தனன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் காணாமல் போன வழக்குகளின் மனுதாரர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக