தூத்துக்குடி லீக்ஸ்11.11.2020
கோவில்பட்டியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனத்தை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.*
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற செயல்களை தடுக்க 360 டிகிரியில் கண்காணிக்ககூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நான்கு சக்கர ரோந்து வாகனத்தை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இன்று (11.11.2020) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
*அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கோவில்பட்டி நகரபகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், சீர்செய்யவும், குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டும் மற்றும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், நான்கு சக்கர வாகனத்தில் 360 டிகிரியில் நான்கு திசைகளிலும் கண்காணிக்கக்கூடிய அளவில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டுள்ள இந்த வாகனம் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சென்று கண்காணிக்கப்படும் என்றும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதே போன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அதிகம் இடங்களில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தூத்துக்குடி நகரத்திலும் கேமராக்களுடன் கூடிய இரண்டு நான்கு சக்கர ரோந்து வாகனமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை காலங்களில் குற்ற செயல்கள் நிகழாமல் தடுக்க கூடுதலாக காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கோவில்பட்டி நகர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு மட்டும் 25 காவலர்கள் ஆயுதப்படையிலிருந்து தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கோவில்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு காவல் நிலையங்களுக்கு மட்டும் 15 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
*இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்அய்யப்பன் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.
*இந்நிகழ்வின் போது பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக