தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி டாஸ்மார்க் கடை எண் 9991 -ல் கடந்த வாரம் தனிக்கை குழு ஆய்வு சென்றது அங்கிருந்தவர்கள் வந்தவர்களை கண்டதும் இருப்பு கணக்கு எவ்வளவு என கேள்விய வீசியதும் வெற்று பெட்டிகளை காட்டி சமாளிக்கப் பார்த்தனர் ஒரு கட்டத்தில் அது முடியாது என அறிந்ததும் அவர்களை உள்ளே தள்ளிவிட்டு ஷட்டர் - ஜ இழுத்து விட்டு அங்கு பணியில் இருந்தவர்கள் ஓட்டமெடுத்தனர்.
ஆறுமுகநேரி டாஸ்மார்க் கடை எண்: 9991 -ன் மேற்பார்வையாளர்கள் இலட்சுமணன், சக்திவேல்.விற்பனையாளர்கள்.
1 சங்கரலிங்கம்.
2.பழனி.
3. செல்வகணேஷ் உட்பட 7 பேர் தலைமறைவு ஆகிவிட்டனர்
![]() |
| கடை மேற்பார்வையாளர் லட்சுமணன் |
இது பற்றி டாஸ்மார்க் மேலாளர் வடமலைமுத்து உதவி மேலாளர் வள்ளிகன்னு தரப்பில் தெரிவித்தாவது.... கோடிகணக்கில் கையாடல் நடைபெற்று இருப்பதாக ஆடிட்டீங் - ல் தெரியவந்து இருப்பதாகவும் இரவு விடிய விடிய அந்த கடையை ஆடிட்டீங் செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்து வந்தார்கள்....
மேலும் பணி ஊழியர்கள் 7 பேர் உடனே கட்டாய விடுப்பில் சென்றிருப்பதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்து வந்தார்கள். மேலும் அவர்கள் கையாடல் பண்ணிய பணத்தில் சொகுசுகார், அப்பார்ட்மென்ட் வீடுகள் வாங்கி இருப்பதாகவும் கையாடல் பண்ணிய பணத்தை அவர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக செய்தியாளர்கள் விவரம் கேட்க தெரிவித்து வந்தார்கள்
கொரோனா தொற்று பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 24- ல் டாஸ்மார்க் மதுகடை அடைக்கப்பட்டு ஜூலை 2ந்தேதிமீண்டும் திறக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் மதுப் பிரியர்கள் ஒரு பாட்டிலுக்கு மூன்று மடங்கு விலை கொடுத்துவாங்கி குடிக்கவும் தயாராக இருந்தனர்.
இது இவர்களுக்கு வசதியாக இருந்ததும் பலே கில்லாடிகள் அனைவரும் சேர்ந்து நான்கு ஐந்து கோடிகள் பார்த்திருக்கலாம் என்கிறார்கள்
மீண்டும் கொரானா தளர்வில் ஜூலை மாதம் திறக்கப்பட்டபோது இந்த ஆறுமுகநேரிடாஸ்மார்க் 9991 கடையின் இருப்பு சரக்கு ரூ 2 கோடியே 28 லட்சத்து, 39 ஆயிரத்து 200 ரூபாய் உள்ளதாக தெரிவித்தது.
கடைக்கு வந்த சரக்கு தொகை. மொத்தம். ரூ 1 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரத்து 460 ரூபாய் என தெரிவித்தது.
மொத்தம் ரூ 3 கோடியே 90 லட்சத்து 54 ஆயிரத்து 680 ரூபாய் ஆகும்.
ஆனால் ரூ 1 கோடியே 45 லட்சத்து 74 ஆயிரத்து 060 மட்டும் விற்பனை நடந்ததாககணக்கு காட்டப்பட்டுள்ளது.
கணக்கில் விற்பனை போகமொத்தம் ரூ 2 கோடியே 44 லட்சத்து 70 ஆயிரத்து 620 ரூபாய் காட்டவேண்டும்.
அங்கேதான் கணக்கு உதைப்பதால் கடைக்கு வரும் மொத்தசரக்கு தொகை, விற்பனை நடந்த மொத்த தொகை மட்டும் காட்டுப்படுமாம்? மொத்த இருப்பு மறைக்கப்படுமாம்.
![]() |
| தினமலர் நாளிதழ் News |
கடையின் மோசடி கோடிக்கணக்கில் நடப்பது ஏனையடாஸ்மாக் தொழிலாளர்களுக்கு தெரியவந்ததால் பட்டாசை கொழுத்தி போட்டுவிட்டனர்.
மோசடி தீயாக பரவியது. அங்காங்கு பெட்டிசன் பறந்தது.
![]() |
| மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் வடமலைமுத்து |
இவ்விஷயம் M.D வரை பரவியதும் டாஸ்மாக் மேலாளர் பெயரளவுக்கு Am யூகி அருண், பொன்னுச்சாமி, பழனி ஆகியோரை அனுப்பி கணக்கு ஆய்வு செய்தாராம். அதில் 76 லட்சம் ரூபாய் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதாம்.
அந்த பணத்தை கடை பணியாளர்கள் செலுத்துவதாக தெரிவித்தாக கூறி கொண்டிருக்கிறார்கள்.
MD டீம்களத்தில் குதித்தது.
கடை யைஆடிட் டீம் தனியாக தணிக்கை செய்தபோது
ஆடிட் டீம் தணிக்கை செய்ததில் ரூ 1 கோடி 8 6லட்சத்துக்கு மேல் மோசடி நடந்தது அறிக்கையாக MD. தனிப்பார்வைக்கு சென்றது.
MD ஆடிட் டீம் தணிக்கை கண்டு தூத்துக்குடிடாஸ்மாக் அலுவலகம் ஆடிப்போய்விட்டது.
தினசரி ரிப்போர்ட் கொடுக்கும் அந்த கடையின் விற்பனையாளர் செல்வகணேஷ் விஷமருந்து அருந்தி விட்டாராம்?
டாஸ்மாக் அலுவலகத்தில் D.S.0.R.V. டெப்போ மேலாளர் மற்றும் டாஸ்மாக்மேலாளர் (D.M) Am போன்ற பதவிகளில் உள்ளவர்கள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் தற்போது கதிகலங்கிபோயுள்ளார்கள்.
பிளாஷ் தகவல்:-
இந்த சிக்கலில் உள்ள வர்கள் ஆளுங்கட்சி துணையிடம் போய் கண்னை கசக்கி போய் நின்று இருக்கிறார்கள் அவரோ? அந்த துறை தங்கமான பெல்லுக்கும் எனக்கும் ஆகாது போய் அடிச்சா காசை திருப்பி கொடுக்க வழிய பாருங்க ... இங்கு அரசியல பரபரப்பில் இருக்கும் எனக்கு உங்க பஞ்சாயத்து வேறா? கோபப்பட்டு விரட்டிவிட்டாராம்.
முக்கியமான மேலான ஆட்டக்காரர் இந்த மாவட்டத்திற்கு வருவதுவதற்கு 25 லகரங்கள் சம்திங்-ல் என்று பெருமையடித்து கொண்டிருந்தவர்.... தினம் வாகன கார் ஒட்டுபவர் சுற்றி வந்தால் ஒரு லகரம் இல்லாமல் வீடு திரும்பமாட்டாராம்!! அவருக்கே இந்த சோதனை?
வேற வழி மொத்த பணத்தையும் இவரே கட்டவைச்சுடுவாங்க போல?....என கண்னை கசக்கிறார்கள். இவரை வள்ளலாக பார்க்கும் தருமிகள்...!!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் துணையோடு டாஸ்மாக்கில் அரசுப்பணம் கோடி, கோடியாக கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்று கொள்ளை நடந்ததா என கண்டறிய தனிக்கமிட்டி அமைக்க டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.....???







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக