அக்டோபர் 17ம் தேதி அ.இ.அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் திருவுருவ சிலை, படங்களுக்கு மரியாதை செலுத்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
வருகிற அக்டோபர் 17ம் தேதி (17.10.2020) சனிக்கிழமை அ.இ.அதிமுக கட்சி நிறுவப்பட்டு 48ஆண்டுகள் முடிவடைந்து, 49 வது ஆண்டு துவங்குகிறது. அதனடிப்படையில் அ.இ.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி அ.இ.அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் ஆணைப்படி தமிழகமெங்கும் அதிமுக ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் அதிமுக 49வது ஆண்டு துவக்கவிழா (17.10.2020) சனிக்கிழமை அன்று காலை 09.30 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி பழைய முனிசிபல் அலுவலக வளாகத்திலுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணா ஆகியோர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கே அமைக்கப்பட்ட புரட்சித்தலைவி மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பின் இனிப்பு வழங்கி கழக ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள் , முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, வார்டு கிளைக்கழக நிர்வாகிகள் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் தவறாது கழக ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளஅன்புடன் அழைக்கிறோம். மேலும், அந்தந்த ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழகத்திற்குட்பட்ட ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழகங்களில் கழக நிறுவனர் இதயதெய்வம் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் திருவுருவ படங்களை அலங்கரித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்துடுமாறும் கழக கொடியேற்றி சிறப்பு செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக