அவர்கள் அனுப்பிய மனு விவரமாவது:-
அனுப்புனர்
கோயில்பிள்ளை நகர் அபிவிருத்தி சங்கம்
1/ 33_19, நான்காவது தெரு, (மேற்கு),
கோயில்பிள்ளை நகர்,
தூத்துக்குடி _628006.
பெறுநர்
உயர்திரு மாநகராட்சி ஆணையர் அவர்கள்
தூத்துக்குடி மாநகராட்சி ,
தூத்துக்குடி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : SEPC வளாகத்தில் பணிபுரியும் நபர்கள் பலருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வரும் தகவல் குறித்து உண்மை நிலை அறியவும், உறுதி செய்யப்பட்டிருந்தால் தங்களின் உடனடி நடவடிக்கைகளை வேண்டியும்_ விண்ணப்பம்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா தொற்று நம் மாவட்டத்தில் பரவாமல் இருக்க தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டிற்குரியது.
தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் எங்களது கோயில்பிள்ளை நகருக்கு மிக அருகாமையில் தமிழ்நாடு திட்டக்குழுவின் அனுமதியின்றி கட்டுமானபணிகளை செய்து வரும் SEPC நிறுவன வளாகத்தில் பணிபுரியும் நபர்கள் பலருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வரும் தகவல் குறித்து உண்மை நிலை அறியவும், உறுதி செய்யப்பட்டிருந்தால் தங்களின் உடனடி நடவடிக்கைகளை வேண்டியும் கோயில்பிள்ளை நகர் அபிவிருத்தி சங்கம் மூலமாக கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட கொடிய தொற்று பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை விபரங்கள் தெரியாமல்
கோயில்பிள்ளை நகர் மக்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் தங்களின் உடனடி நடவடிக்கைகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
குறிப்பு :
=======
நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் கட்டுமானப் பணியை அனுமதிப்பது தூத்துக்குடியில் கொரானா தொற்று அதிகப்படியான பரவலுக்கு வித்திடும்.
இவ்வாறு தூத்துக்குடி மாநகராாாட்சி ஆனையருக்கு அனுப்பிய உள்ள மனுவில் கூறியிருந்தார்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக