திங்கள், 29 ஜூன், 2020

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றிடு! வியாபாரிகளை படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்க என்று AlYF சார்பாக இன்று 29-06-2020 தூத்துக்குடியில் ஆர்பாட்டம்!!!

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றிடு!
வியாபாரிகளை படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய்க என்று AlYF சார்பாக இன்று 29-06-200 தூத்துக்குடியில் ஆர்பாட்டம் செய்தனர்.

சாத்தான்குளம் தந்தை - மகனை படுகொலை செய்த  காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

சாத்தான்குளம் மருத்துவர், குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் கோவில்பட்டி சிறை அதிகாரி ஆகியோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உடுமலை சங்கர் சாதி ஆணவ படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மீது உடனடியாக மேல்முறையீடு செய்திடு !

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றிடு!
முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
(AIYf )சார்பாக தூத்துக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு AIYF மாவட்ட செயலாளர் P. சந்தனசேகர் தலைமையில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் தோழர்கள் பெருமாள், காளீஸ்வரன், ஜீவா, பலவேசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டம் தோழர் அரிகரசுதன் தலைமையில் நடைபெற்றது.

எட்டையாபுரம் படர்ந்த புளியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு AIYF மாவட்ட துணை தலைவர் தோழர் சோலையப்பன் தலைமை தாங்கினார். ஏரல் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு AIYf தாலுகா தலைவர் தோழர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக