திங்கள், 8 ஜூன், 2020

வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார்களை திருடியது தொடர்பாக பாமகவைச் சேர்ந்த முன்னாள் தூத்துக்குடி முக்கிய நிர்வாகி கைது!!!_


தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 1வது  தெருவைச் சேர்ந்த அற்புத ரவிக்குமார் என்பவர் தனது வீட்டின் முன் கடந்த 6ஆம் தேதி  நிறுத்தி வைத்திருந்த காரை இரவு நேரத்தில் காணவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் அற்புத ரவிக்குமார் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கார்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கார் திருடும் கும்பலை தேடிவந்தனர். _

_இந்த நிலையில் தூத்துக்குடி 4ஆம் கேட் அருகே வடபாகம் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். காவல்துறையினரை கண்டதும் காரை திருப்பி தப்பி ஓட முயன்றுள்ளனர். விரட்டி சென்ற காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்ததில் தூத்துக்குடி சுந்தரவேல்ரம் பகுதியில் காணாமல் போன கார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து காரில் இருந்த அவரை கைது செய்து விசாரணை செய்ததில் இவர் தூத்துக்குடி மாநகர பாமக முன்னாள் செயலாளர் ஜமாலுதீன் என்பது தெரியவந்தது. 

_இதைத் தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரும் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து கார் திருடியதை ஒப்புக்கொண்டனர். 
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இவரிடமிருந்து சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்று கார்கள் ஒரு மினி லோடு ஆட்டோ ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து தலைமறைவான குற்றவாளி அப்துல் அஜீஸ் தேடி வருகின்றனர். மேலும் இவர்களுக்கும் கார் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். _வழக்கம் போல்....?_இதில் காவல்துறையினரை கண்டு ஜமாலுதீன் தப்பி ஓடும்போது தவறிவிழுந்து அவர் கை முறிந்து காவல்துறையினர் மாவுக்கட்டு போட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக