திங்கள், 15 ஜூன், 2020

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களை அழைத்து வர மத்திய,மாநில அரசுகளுக்கு : காயல் அப்பாஸ் கோரிக்கை !!!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  .

கொரோனா என்கிற கொடிய தொற்றுவின் காரணமாக மத்திய அரசு விமான சேவையை ரத்து செய்துள்ளது . இதில் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் தமிழகம் வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர் .

மேலும் இந்த கொரோனா தொற்றுவின் காரணமாக வெளிநாடுகளில்  கம்பெனிகள் மூடப்பட்டதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் பலர் சாலை ஓரத்தில் படுத்து உறங்கும் நிலைக்கு  தள்ளப்படுகின்றனர் இதனால் தமிழகத்தில் உள்ள அவர்களின் குடும்பத்தினர்கள் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் . 

தமிழகத்திலிருந்து பொருளாதார தேவைகளுக்காக தனது மனைவி,மக்களை, மற்றும் குடும்பத்தார்களையும்  பிரிந்து பிளைப்பிற்க்காக வெளிநாடுகள் சென்று மிகவும் கஷ்டபட்டு வேலை செய்து வருகின்றனர் . இந்த நிலையில் கொரோனா தொற்றுவின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தமிழகம் வர முடியால் மிகவும் சிரமத்துகுள்ளாகி வருகின்றனர் 

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழக மக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி  போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக