ஞாயிறு, 14 ஜூன், 2020

திமுக- காங்கிரஸ். கட்சியிலிருந்து விலகி தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் 50 பேர் அதிமுகவில் இனைந்தனர்.!!!

தூத்துக்குடியில் அ இ அ தி மு க கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி 54 வது வார்டு முத்தையாபுரம் தங்கம்மாள் புரம் சண்முக புரம் பகுதியில் உள்ள திமுக- காங்கிரஸ்  மாற்று கட்சியினர் 50 பேர் அ இ அ தி மு க வில் இணைந்தனர் .

அ.திமுகவில் இணைந்த மனோகரன்  நாரயணன் மற்றும் மாற்று கட்சியினர் 50 பேருக்கும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் சால்வை அணிவித்தார்.பின்பு  தூத்துக்குடி அ.திமுகவில் அனைவரும் அயராது பாடுபட வேண்டும்  என மகிழ்ச்சியுடன் கேட்டுகொண்டார்


இந்நிகழ்ச்சியில் கிழக்கு பகுதி செயலாளர் சேவியர் மேற்கு பகுதி செயலாளர் முருகன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள்  தலைவர் பி டி ஆர் ராஜகோபால் பொது குழு உறுப்பினர் எஸ்.கே மாரியப்பன் அரசு வழக்கறிஞர் ராஜாராம் மாவட்ட அம்மா பேரவை துனை செயலாளர் ஜீவா பாண்டியன் தெற்கு பகுதி கழக பொருளாளர் ராஜ சேகர் முன்னாள் மாமன்ற  உறுப்பினர் ஜெயகுமார் மேலூர் கூட்டுறவு வங்கி துனை தலைவர் சிவா வட்ட கழக செயலாளர் சீனி வாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி லீக்ஸ்-க்காக
பதிவு 2020 ஜூன் 15 
6.30 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக