வியாழன், 11 ஜூன், 2020

ரூ.33 இலட்சம் மதிப்பிலான நிவாரணம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில்... எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கல்!!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீனவகுண்டம் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் 
5 ஆயிரம் பேருக்கு ரூ.33 இலட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் கிலோ அரிசி 5 ஆயிரம் கிலோ பருப்பு  நிவாரண பொருட்களை தனது சொந்த செலவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் ஆணைக்கிணங்க  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் சொந்த செலவில் ஏழை எளியோர், மீனவர்கள், ஆட்டோ, ரிக் ஷா ,உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள்,  வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள், மற்றும் நரிக்குறவர், திருநங்கைகள்,  ஆகியோருக்கு நிவாரண உதவிகளையும்

கடந்த 41 நாட்கள் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகளையும்  மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் எம்எல்ஏ தன் சொந்த செலவில் வழங்கினார்.


அதனடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி வார்டுகள் மற்றும் ஊராட்சி பகுதிகளான பேரூர், திருப்புளியங்குடி, தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம் ஆகிய பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் உட்பட 5 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கும் விழா நடந்தது.
       விழாவில் ரூ.33 இலட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் கிலோ அரிசி, 5 ஆயிரம் கிலோ பருப்பு என 5000 பேருக்கு தலா 10 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு என நிவாரண பொருட்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
      
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் காசிராஜன்,  மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அரசு வழக்கறிஞர் கருப்பசாமி, ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், யூனியன் சேர்மன் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், வாசுகிநடராஜன்,
அதிமுக நிர்வாகிகள் பத்மநாபமங்கலம் சுப்பையா, ஒன்றிய துணைச் செயலாளர் பெரியசாமி, பேரூர் சிங்கப்பன், சின்னப்பன், திருப்புளியங்குடி மாரியப்பன், பரமசிவன், மோகன், தோழப்பண்பண்ணை இசக்கி, பலவேசம், பரமசிவம், பத்மநாபமங்களம் கவுன்சிலர் குமார், கந்தன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், முன்னாள் சேர்மன் விஜயகுமார்,மற்றும் அனவரதநல்லூர் சுப்பிரமணியன், தென்திருப்பேரை ஆறுமுகநயினார், உமரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக