வேலூர் நேதாஜிமார்கெட், பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் தடை செய்யப்பட்ட பொருள்களை பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
அதன் படி உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டம்ளர் 200 கிலோவும் காலாவதியான 3 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.கடை காரருக்கு ரூ 3000 அபராதம் விதிக்கப்பட்டது.
கே.எம்.வாரியார்
வேலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக