சனி, 6 ஜூன், 2020

செல்வமகள் சேமிப்பு திட்டம் 100 பெண் குழந்தைகளுக்கு -தனது செலவில் சேமிப்பு கணக்கை துவங்கி வைத்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ!!!

ஏரல் அருகே பண்ணைவிளையில் இந்திய அஞ்சல் துறை செல்வமகள் சேமிப்பு திட்டம்
 100 குழந் தைகளுக்கு.....
தனது செலவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ சேமிப்பு கணக்கை துவக்கிவைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சிக்குட்பட்ட
பண்ணைவிளை, பண்டாரவிளை, பண்ணைவிளை புதூர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 100 குழந்தைகளுக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ  செலவில் தலா ரூபாய்.250 வைப்புத்தொகை செலுத்தி 100 பேருக்கு சேமிப்பு கணக்குப் புத்தகத்தை பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி தலைவர் திருமதி. ஆஷா சண்முகநாதன் வழங்கினார். 


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அஞ்சலக உப கோட்டத்திற்குட்பட்ட பண்ணைவிளையில் இந்திய அஞ்சல் துறை செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கு புத்தகம் வழங்கும் விழா ஸ்ரீவைகுண்டம் உப கோட்ட அஞ்சலக ஆய்வாளர் பாலாஜி தலைமையில் நேற்று (06.06.2020)நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் பண்ணைவிளை கிளை அஞ்சலக அதிகாரி அல்ஜோரா, பண்டாரவிளை கிளை அஞ்சலக அதிகாரி ராணி, நட்டாத்தி கிளை அஞ்சலக அதிகாரி ஜமுனா கார்த்திகா, பெருங்குளம் கிளை அஞ்சலக அதிகாரி விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி தலைவர் திருமதி. ஆஷா சண்முகநாதன் அவர்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ-வின் செலவில் 100 பயனாளிகளின் குழந்தைகள் பெயரில் தலா ரூபாய் 250 வைப்புத்தொகை செலுத்தி பதியப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்ட அஞ்சலக கணக்கு புத்தகத்தை வழங்கினார். 

அப்போது அதிமுக பிரமுகர்கள் இப்ராஹிம், எபனேசர், ஜெயா வேதமாணிக்கம், போஸ்ட்மேன் சந்தோஷ் உட்பட பலர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக