ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறியதாவது:-
கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி தூத்துக்குடி மாவட்டம், குலசேகர பட்டிணம் , கீழ புது தெருவை சேர்ந்த M S F முகைதீன் இஸ்மாயில் அவர்கள் 01-06-2020 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கபட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் எனவும் கட்சியின் விதி முறைககளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
மேலும் மாநில கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்க பட்டுள்ள M S F முகைதீன் இஸ்மாயில் அவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக