புதன், 13 மே, 2020

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ...IMCU மற்றும் Medical Ward களில் பணிபுரிபவர்களுக்கு தேவையான பரிசோதனை நடவடிக்கை செய்திட ... Aiyf சார்பாக தூத்துக்குடி கலெக்டருக்குவேண்டுகோள் மனு!!!

பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தூத்துக்குடி

அய்யா
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மாரியூர் ஊரை சேர்ந்த காசி என்பவரது மகன் அருளானந்தம் வயது 34 இவர் சென்னையிலிருந்து ஊர் திரும்பிய நிலையில் உடல் நிலை மோசமானதினால் 11-5-2020 அன்று  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் IMCU வில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோரின் நடவடிக்கையால் இன்று 13-05-2020 கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரானா நோய் தொற்று  உறுதியாகியுள்ளது

 இதனால் IMCU -ல் பணிபுரிந்த மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள் மேலும் IMCU உடன் நெருங்கிய தொடர்புடைய Male Medical Ward மற்றும் Fகemale Medical Ward களில் பணிபுரிகின்ற மருத்துவர்கள் பயிற்ச்சி மருத்துவர்கள்  செவிலியர்கள் துப்புராவு பணியாளர்கள் நோயாளிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள் 

ஆகவே IMCU மற்றும் Medical Ward களில் பணிபுரிபவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சமுக விலகள் ஆகியவற்றிற்குமாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்வழக்கறிஞர் பெ சந்தனசேகர்மாவட்ட செயலாளர்AIYF தூத்துக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக