சனி, 2 மே, 2020

தூத்துக்குடி பகுதிகளில்... ஊரடங்கு அரசாணைகளை மீறி கல்வி கட்டணம் ...தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

ஊரடங்கு அரசாணைகளை மீறி கல்வி கட்டணம் கேட்டு மிரட்டும் தூத்துக்குடி விகாசா பள்ளி மற்றும் அழகர் பள்ளி.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை.

கொரானா வைரஸ் தடுப்பு காரணமாக மத்திய மாநில அரசுகள்  பல்வேறு ஊரடங்கு விதிகளை வகுத்துள்ளதோடு,  கட்டுப்பாடு நடைமுறைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்நுட்ப பயிலகங்கள் என அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதோடு கல்விக் கட்டணங்கள் தொடர்பாக தமிழக அரசு சில அறிவிப்புகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் இயங்கி வரும் விகாசா பள்ளி மற்றும் அழகர் பள்ளியானது தற்போது பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளது.
மேலும் அவ்வாறு கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வரும் ஆண்டுகளில் அனுமதிக்க இயலாது எனவும் பகிரங்கமாக மாணவர்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்தி உள்ளது. 

கொரனா பீதியில் உலக நாடுகளே ஸ்தம்பித்து, பொருளாதார சூழல்கள்  அதல பாதளத்திற்கு
சென்று உள்ளதோடு,  தூத்துக்குடியில் உள்ள மக்கள் பசி, பட்டினியால் ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர மக்களும் திண்டாடும் வேளையில் தூத்துக்குடி விகாசா பள்ளி மற்றும் அழகர் பள்ளிகள் மாணவர்களை  பள்ளிக்கட்டணம் செலுத்த சொல்லி  கட்டாயப்படுத்துவதாக பெற்றோர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.தொழில்கள் இன்றி,  பணப்புழக்கம் இன்றி சிக்கி தவிக்கும் இந்த சூழலில் பள்ளிக்கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவது என்பது தமிழக அரசின் அறிவிப்பாணைகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை விதிகளுக்கு எதிரானதாகும்.

 கல்வி என்பதை வியாபாரமாக எண்ணி இதுப் போன்ற ஊரடங்கு நேரங்களில் அரசின் விதிகளை மீறி கல்வி கட்டணம் கேட்டு பொதுமக்களை மிரட்டி வரும் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள விகாசா பள்ளி மற்றும் அழகர் பள்ளி ஆகிய தனியார் கல்வி  நிறுவனங்கள் மீது தமிழக அரசு, மாநில பள்ளிக்கல்வி இயக்குனரகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்....
*பெ.சந்தனசேகர்.*
(மாவட்ட செயலாளர்)
AIYF  தூத்துக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக