ஏரல் அருகே பண்ணைவிளையில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடி
எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பண்ணைவிளையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணைவிளையில் புதிய ஆவின் பாலகம் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் திருயோகராஜ் தங்கையா தலைமையில் நடைபெற்றது.
'
சி.எஸ்.ஐ சேகர குரு டேவிட் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ புதிய ஆவின் பால் பொருட்கள் விற்பனை அங்காடியை திறந்து வைத்து
முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், பண்ணைவிளை வெற்றிராஜ், அதிமுக பிரமுகர்கள் வேதமாணிக்கம், பண்டாரவிளை பொன்ராஜ், பெருமாள், பால்துரை, சுரேஷ், திருத்துவராஜ், எபன் உட்பட பலர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக