திங்கள், 18 மே, 2020

திருக்கோயில்களை திறக்க வேண்டும்!!! தமிழக அரசுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை!!!

பக்தர்கள் தரிசனத்திற்கு திருக்கோயில்களை திறக்ககேண்டும்!!!
தமிழக அரசுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர்  கோரிக்கை விடுத்துள்ளார்:
அது பற்றி விபரமாவது:-

 உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசின் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நான்காவது முறையாக நீட்டிப்பு செய்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி மிகவும் மனவேதனைகளில் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆகையால் திருக்கோயில்களை கடுமையான கட்டுப்பாடுகளுடனும் , அனைத்துவித  பாதுகாப்புகளுடனும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய உடனே அனைத்துவித நடவடிக்கைகளையும் மிக சிறப்பாக எடுத்து  தமிழக அரசு உடனே  திருக்கோயில்களை திறந்திடவும் , மேலும் தினம் 300 முதல் 500 நபர்கள் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் வசதியினை ஏற்படுத்தி அதில் எவ்வித பாகுபாடின்றி அனைத்து பகதர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்யுமாறு அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுத்திடவும் , திருக்கோயில்களில் நடைபெற்று வந்த அன்னதானம் திட்டமும் தொடர்ந்து சமூக இடைவெளியுடனும் , பாதுகாப்புடனும்  நடைபெற வேண்டும்.

மேலும் திருக்கோயிலில் பணியாற்றும் அதிகாரிகள் , பணியாளர்கள் , அர்ச்சகர்கள் , பக்தர்கள் என அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைப்பிடித்திட கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் , ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதால்  திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம்  எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் அனைத்து  பக்தர்களுக்கும் ஒரே மாதிரியான தரிசனம் செய்யும் முறையினை அமல்படுத்திடவும் தமிழக அரசை அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாகவும்  மற்றும்  பொதுமக்களின் நலன் கருதி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக