வியாழன், 21 மே, 2020

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் மாற்றுதிறனாளி மக்களுக்கு வீடு தேடிச்சென்று தொடர்ந்து சேவை !!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசின் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில்  யாருடைய உதவியும் கிடைக்க பெறாமல் தவித்துக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் மக்கள் பணிகளை கேள்விப்பட்டு சங்கத்தின் பொறுப்பாளர் திருமதி லட்சுமி அவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.தகவல் தெரிந்த உடனே திருமதி.லட்சுமி சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி~யை அலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தார்

உடனே சங்கத்தின் பொறுப்பாளர்கள் கருணாநிதி , ராமகிருஷ்ணன் , ஆனந்த் , சுந்தர்  ஆகியோருக்கு விவரத்தை சொல்லி அத்தியாவசியப் பொருட்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

சங்கத்தினர் உடனே அரிசி , மளிகை பொருட்கள் , காய்கறிகள் 10~நாட்களுக்கு தேவையான பொருட்களுடன் அவர்களுக்கு சென்று வழங்கினார்.பொருட்களை பெற்ற அந்த குடும்பத்தினர் சங்கத்தினருக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றியினை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக