![]() |
கந்துவட்டி கும்பல் |
சமூக வன்முறைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு
09.05.2020
==============================
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தாலுகா, ஆழ்வார் திருநகரியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இருபது வீடுகளைக் கொண்ட தேவேந்திரர்கள் மட்டுமே வாழும்
உடையார்குளம் காந்திநகர். இருபது குடும்பமும் சொந்தமான நிலத்தில் விவாயம் செய்து வருகிறார்கள்.
அக்கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மகன் பலவேசம் சில மாதங்களுக்கு முன்பு அருகிலுள்ள வைத்தியலிங்கபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த கந்துவட்டி கும்பல் சண்முகத்துரை,முத்துராஜிடம் வீட்டுப் பத்திரத்தை அடமானமாகக் கொடுத்து கடன் வாங்கி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு
வாங்கி யகடனை வட்டியும் முதலுமாக அடைத்து விட்டு வீட்டுப் பத்திரத்தை கேட்டுள்ளார் சண்முகத்துரை, முத்துராஜ் கந்து வட்டிக்கும்பல் பலவேசத்தின் வீட்டை அபகரிக்கும் நோக்கோடு
சாதியை குறிப்பிட்டு அநாகரிகமாக திட்டி அடிக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பலவேசம் கடந்த 07.05.2019 அன்று நாசரேத் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். காவல்துறை வழக்கம்போல
இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
வட்டியும் முதலுமாக கடனை அடைத்த பின்னும் வீட்டுப் பத்திரத்தை திருப்பித் தர மறுத்த கந்துவட்டிக் கும்பல் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்ததற்காக 08.05.2020 இரவில் பலவேசத்தின் வீட்டிற்குள் பயங்கரமான ஆயுதங்களுடன் நுழைந்து பலவேசத்தை வெட்டிச் சாய்த்துள்ளனர். அப்போது பலவேசத்தினுடைய இரண்டாவது மகள் முத்துலெட்சுமியின் கணவர் தங்கராஜ் என்பவர் தடுத்துள்ளார் அவரையும் வெட்டிச் சாய்த்துள்ளனர் இந்தத் கொடூரத்தை அறங்கேற்றி விட்டு பயமோ, பதற்றமோ இல்லாம கந்து வட்டிக் கும்பல் சாவகாசமாக சென்றுள்ளது.
. பொதுச் சமூகத்தை அச்சுறுத்தும் இத்தகைய தொழில்முறைக் குற்றவாளிகள் சர்வசுதந்திரமாக சமூகத்தில் வலம் வருகிறார்கள்.
உடையார்குளம் காந்திநகர் பலவேசம், தங்கராஜ் படுகொலையில் காவல்துறை முழுமையான
பாராபட்சமற்ற விசாரணை செய்து, உண்மையான குற்றவாளிகளும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்துவதோடு,
அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, படுகொலையானவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழக அரசே !
கந்துவட்டித் தொழிலை முழுமையாக தடை செய்திடுக !
கந்துவட்டித் தொழிலை தேசவிரோத குற்றமாக்கும் வகையில் சட்டடம் இயற்றுக !!
உடையார்குளம் பலவேசம், தங்கராஜ் படுகொலையில் தொடர்புடைய ஜாதிய பயங்கரவாதிகளை
தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்துக !!!
உடையார்குளம் காந்திநகர் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிடுக !!!!.
தாலுகா தோறும் சமூக செயல்பாட்டாளர்களை உள்ளடக்கிய கந்து வட்டி ஒழிப்பு சிறப்புப் படை அமைத்திடுக !!!!!
இங்ஙனம்.
#சமூக_வன்முறைக்கு_எதிரான
#தமிழர்_கூட்டமைப்பு
மள்ளர் பேராயம்
9629721711
பாண்டியர் பேரியக்கம்
9894639592
மள்ளர் நாடு
9944439291
தென்னக வேந்தர் கட்சி
9487749999
தேவேந்திரகுல வேளாளர் சங்கங்கள் மற்றும் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு
9786171149
தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு - 9841862750
மருதநில வேந்தர்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை
9894376465
தமிழர் விடுதலைக் களம்
9944241001
தமிழர் தேசிய பேரவை
+91 85258 84999
தமிழர் தேசிய கழகம்
9080003047
மூவேந்தர் புலிப்படை
7871395253
மருதநாட்டு வேங்கைகள்
9626848100
தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கம்
9003882090
தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை
9944556996
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்றச் சங்கம்
9952076376
தேவேந்திரகுல வேளாளர் நற்பணி மன்றம் (தேனி)
9585621263
மருதம் பண்பாட்டு மையம்
(சிவகாசி) 7695914941
தளபதி நீதிக் குழுமம்
9994445330
அரசியல் அதிகார அமைப்பு
9447731888
coronovum kontrozhiththidal vendum, ithu poantra kaattu miraandikalai - kuripaarththu.
பதிலளிநீக்கு