தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் வசிக்கும் 16 வயதான மைனர் பெண்ணிற்கும், புதுக்கோட்டையை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக சைல்டுலைன் அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவல்படி அதிகாலை 7 மணிக்கு சம்மந்தபட்ட இடத்திற்கு சமூக நல துறை ஊர் நல அலுவர் சண்முகசுந்தரி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், ஆற்றுப்படுத்துனர் சங்கரி, குழு உறுப்பினர் அருண்குமார், மற்றும் முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், காவலர் செல்வராஜ் ஆகியோர் குழுவாக சென்று விசாரித்ததில் பெண் குழந்தையின் வயது 16 என தெரிய வந்தது.
உடனே குழந்தைக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் மாப்பிள்ளை ஊரான புதுக்கோட்டை போலீசிற்கும் தகவல் அளிக்கப்பட்டது.
குழந்தைக்கு இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சட்டபடியான குற்றம் குறித்தும் ஆற்று படுத்துதல் செய்யப்பட்டது. பெற்றோரிடம் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக