ஞாயிறு, 24 மே, 2020

சங்கரன்குடியிருப்பில் நலிவுற்ற 500 பேருக்கு கொரோனா நிவாரண உதவி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கல்!!!.

சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பில் நலிவுற்ற 500 பேருக்கு கொரோனா நிவாரண உதவி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து அதிமுக சார்பில் சங்கரன்குடியிருப்பில் நலிவுற்ற 500 பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசிபை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுக்குளம் பஞ்சாயத்து சங்கரன்குடியிருப்பில் ஏழை-எளிய 500 பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயபதி தலைமையில் இன்று (24.05.2020) சங்கரன் குடியிருப்பு காமராஜர் மன்றத்தின் முன்பு வைத்து நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிக் கழகச் செயலாளரும் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான பாலமேனன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ சாத்தான்குளம் யூனியன் சேர்மன் ஜெயபதி, ஊராட்சி மன்ற தலைவர் பால மேனன் ஆகியோர் ஏற்பாட்டில் தலா 5கிலோ அரிசியை நலிவுற்ற 500 பேருக்கு வழங்கினார். அப்போது முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், ஒன்றியக் கழகச் செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி, மாவட்ட கவுன்சிலர் தேவ விண்ணரசி, சாத்தான்குளம் நகர செயலாளர் என்.எஸ்.செல்லதுரை, முன்னாள் யூனியன் சேர்மன் சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் சாத்தான்குளம் துணைச் சேர்மன் அப்பாத்துரை, ஜோதி, செல்வம், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டான்லி பிரகாஷ், அதிமுக பிரமுகர் அந்தோணி செல்வம், முதலூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் சுபாஷ், பள்ளக்குறிச்சி ஊராட்சிக் கழகச் செயலாளர் கார்த்தீஸ்வரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ஆர். ரமேஷ், முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயராணி, ஒன்றிய அம்மா பேரவை தலைவர் அமுதுண்ணாகுடி சின்னத்துரை உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக