வியாழன், 23 ஏப்ரல், 2020

கொரானா - தாக்குதல் ? வாணியம்பாடி காவல்நிலையம் பூட்டி சீல் வைப்பு!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டது.

இதனால் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கப்பட்டு அந்த காவல் நிலையத்திற்க்கும் சீல் வைத்தது.*

இந்நிலையில் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணிபுரியும் 43 காவலர்கள் தற்போது தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் வாணியம்பாடி கிராமிய காவல் பெண் ஆய்வாளர் தங்கியிருந்த செட்டியப்பணூர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.*

*பின்னர் பெண் ஆய்வாளர் தங்கியிருந்த வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் மருத்துவர் குழுவினர், வருவாய்த்துறையினர் என அனைவரும் சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Newsby
வாரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக