புதன், 29 ஏப்ரல், 2020

பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!!!


இந்தியாவின் பிரபல சினிமா நடிகர்களில் ராஜ்கபூர் ஒருவர். இவரின் மகன் ரிஷி கபூர் .இவர் 1970-ல் தனது தந்தையுடன் குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்தார். பின்பு 1973-ல் வெளியான பாபி படத்தின் மூலம் பிரபலமானார். 


பல வெற்றி படங்களை நடித்த அவருக்கு Mora Naam J0KAR திரைப்பட தேசிய விருது கிடைத்தது. புற்று நோயால் பாதிக்கப்பட்டரிஷி கபூர் கடந்த ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று 30-04-2020காலை காலமானார்.

 இவருக்கு நீதுகபூர்என்ற மனைவியும் ரன்பீர் கபூர் என்ற மகனும் உள்ளனர். 
அனைத்து அரசியல் தலைவர்கள் சினிமா துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். இதனால் பாலிவுட் வட்டாரம் சோகத்தில் உள்ளது.

கே.எம்.வாரியார்
நிருபர்.வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக