வியாழன், 2 ஏப்ரல், 2020

கொரானா வை விரட்டும் Vs தூத்துக்குடி நிருபர்கள்!!! கொரானா தடுப்பு நிவாரண த்திற்கு தூத்துக்குடிகலெக்டரிடம் காசோலை 10 ஆயிரம் வழங்கிய தூத்துக்குடி நிருபர் ராஜா சாலமோன்!!!


தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகல் ஊரடங்கு என  மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு உத்தரவு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

மாவட்டஆட்சியர்கள் காவல்துறை மற்றும் மாநகர ஆணையர்கள் அதிகாரிகள் துரித மாக செயல்படுத்தி வருகிறார்கள் 

இதில் மக்கள் நலன் சார்ந்து அனைத்து பத்திரிக்கை அதன் செய்தியாளர்களும் பொதுவெளியில் உலவ முடியாத இத்தருணத்திலும் உயிரை பணயம் வைத்து செய்தி சேகரித்து மக்கள் கடமை யாற்றி வருகின்றனர். 

தூத்துக்குடி செய்தியாளர்கள் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் தங்கள் முழு அர்ப்பணிப்போடு செய்திப் பணியில் களத்தில் இருந்து வருகிறார்கள். 

இந்த தருணத்தில் மாவட்ட ஆட்சியர் காவல்துறை  அதிகாரிகள் மாநகர ஆணையர் மக்கள் நலன் சார்ந்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நடவடிககையும் தூத்துக்குடி செய்தியாளர்கள் உடனுக்குடன் பொதுமக்களுக்கு நாளிதழ் ஊடகம்  சமுகவலை இணைய தளம் (thoothukudileaks )மற்றும் வாட்ஸ்-அப் மூலமும் செய்தியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களிடம் அறியப்படுத்தி வருகிறார்கள். 

தூத்துக்குடியில் செய்தியாளர் பணி மெச்சதக்கது என காவல்துறை மற்றும் அதிகாரிகளும் இவ்வேளையில் பாராட்டும் தெரிவிக்கின்றனர். 


தூத்துக்குடி எம்.பி கனிமொழி அவர்களுடன் தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முக அந்தரம் செயலாளர் பிரபாகரன் ெ பொருளாளர் சீனிவாசகன்

இச்சூழ்நிலையில் களத்தில் செய்தி நிருபர்களுக்கு கொரானா வைரஸ் தாக்காமல் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முக சுந்தரம் செயலாளர் பிரபாகரன் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மரியானதக்குரிய முத்த பத்திரிக்கையாளர்கள் சன் டிவி வசீகரன், ஜெயா டிவி அருண் ஆகியேரின் ஆலோசனையுடன் எடுத்துவருகிறார்கள்.


கடந்த 2020 மார்ச் 30 மற்றும் 31 மற்றும் ஏப்ரல் 1- என்று தொடர்ந்து மூன்று நாட்களாக தூத்துக்குடி செய்தியாளர்களுக்கு கபசுர குடிநீர் பருக வழங்கியும் முகத்தில் மாஸ்க் அணியவும் அடிக்கடி கை கழுவவும் சமூக விலகல் இடைவெளி செய்தி சேகரிக்குமாறும் இதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமென அக்கறையுடன் வற்புறுத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கல் !!!! 

தூத்துக்குடி பத்திரிக்கையாளர்மன்ற தலைவர் த.சண்முகசுந்தரம் அவர்களுடன் இணைந்து தனது சொந்த முயற்சியில் மதிப்புக்குரிய மன்ற உறுப்பினர்   மா.கண்ணன் | எடிட்டர் | காலை தீபம்  மற்றும் மதிப்புரிக்குரிய மன்ற உறுப்பினா்  முத்துராமன் | கேப்டன் டிவி Reporter ஆகியோர் கபசுர நீர் நிருபர்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்திருந்தார்கள்.
 மேற்படி தினங்களில் கப சுர குடிநீர் திரு.சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் திரு.ஜோசப் ஆகியோர் உடன் குடிநீர் கப் திரு.ராஜ்  வழங்கி உதவினார்கள்.
அத்துடன். தளிர்அறக்கட்டளை
தலைவர் ஆ. தனபால், தலைமை அதிகாரி ஜெயப் பிரகாஷ்,
அற்புதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜேம்ஸ் ஆகியோர் நிருபர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான
முகக்கவசம், சோப், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார்கள்.
onetamilnews சமுகவலைதளம் பத்திரிக்கையாளர் ஜெகஜீவன் கொரனா தடுப்பு சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருவதும் குறிப்பிடததக்கது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி அளித்த கொரானா தடுப்பு பிரஸ்மீட் 01 - 04-2020 அன்று நடந்தது. 
அதன் பின்பு  தூத்துக்குடி மூத்த செய்தியாளர் ராஜா சாலமோன்  கலெக்டர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் ரூ 10 ஆயிரத்திற்கான காசோலையை கொரானா தடுப்பு நிவாரண நிதியாக தன் பங்களிப்பை பெற்றுகொள்ளுமாறு வழங்கினார். தூத்துக்குடி நிருபரின் செய்கையால் உடன் மகிழ்ச்சி அடைந்தார் கலெக்டர் சந்தீப்நந்தூரி. 
பின்பு தூத்துக்குடி செய்தியாளர் அனைவரையும் பார்த்து கொரானா வைரஸ் -ன் திவிரம் புரிந்து மிக கவனமாக செய்தி சேகரிப்பில் இருங்கள் என மிகு அக்கறையுடன் பேசினார் கலெக்டர் சந்தீப் நந்தூரி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக