ஞாயிறு, 8 மார்ச், 2020

தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் தூத்துக்குடியில் பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா துவக்கி வைப்பு.இது காலத்தின் கட்டாயம் என ஹெச்.ராஜா பேச்சு!!!.!!!

தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம்


தூத்துக்குடியில் பிஜேபி தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா துவக்கி வைத்து இது காலத்தின் கட்டாயம் என தெரிவித்தார் ஹெச்.ராஜா.


தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் தமிழகத்தில் புதிய  வியாபாரி சங்கத்தை பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  துவங்க வைத்தார்.

தூத்துக்குடியில் இன்று 8 - 03 - 2020 மாலை 5 மணியளவில் டூவிபுரம் செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில்   சங்க தலைவர் ஈஸ்வரன் தனலமையில் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பி.ஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் எனும் பெயரில் புதிய வியாபாரிகள் சங்கத்தை துவக்கிவைத்தார்.
 முன்னதாக பிஜேபி கொடி ஏற்றி பாரத்மாதா கீ ஜே.என கோஷம் எழப்பினார்கள்.

பின்பு தூத்துக்குடி செய்தியாளரிடம் புதிய வியாபார சங்கம் குறித்து ஹெச்.ராஜா
 பேசியதாவது:
 தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம்.இன்று ஆரம்பிக்கப்பட்டது இது காலத்தின் கட்டாயம் என்று கூறினார்
அதனை தொடர்ந்து வியாபார சங்க தலைவர் ஈஸ்வரன் பேசினார்.
இக்கூட்டத்தில் பிஜேபி நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். கூட்டம் நடைெற்ற இடத்தை சுற்றி போலீஸ் பலத்த பாதுகாப்பு. செய்யப்பட்டிருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக